மது விற்ற 15 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, மே:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் மதுபாட்டில்களை பதுக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி போலீசார் நேற்று தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 286 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.