அத்தியாவசிய தேவை இன்றி நடைபயிற்சி சென்ற 10 பேர் மீது வழக்கு

அத்தியாவசிய தேவை இன்றி நடைபயிற்சி சென்ற 10 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-05-22 19:04 GMT
ஊட்டி,

முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முழு ஊரடங்கை மீறி பொதுஇடங்களில் பெண்கள் உள்பட சிலர் நடைபயிற்சி சென்றனர்.

அத்தியாவசிய தேவை இன்றி நடைபயிற்சி சென்றதாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் மூலம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கூடலூர் அருகே தனிமைப்படுத்தப்பட்ட தேவாலா பகுதியில் வெளி நபர்கள் உள்ளே செல்லவோ, உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லவோ கூடாது. 

அப்பகுதியில் தடையை மீறி வெளியே வந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பொதுஇடங்களில் நடைபயிற்சி செல்லாமல் தங்களது வீட்டு மாடிகளில் அல்லது முன்புறம் உள்ள இடங்களில் நடைபயிற்சி செல்லலாம். பொது இடங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்