பொள்ளாச்சி பகுதியில் 250 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி பகுதியில் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-05-22 19:04 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் ஆ.சங்கம்பாளையம், ஆச்சிப்பட்டி, வடக்கிபாளையம், நாதேகவுண்டன்புதூர், திம்மங்குத்து, போடிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

தெற்கு ஒன்றியத்தில் சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி, சமத்தூர், ஜமீன்ஊத்துக்குளி, சின்னாம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரம், டி.கோட்டாம்பட்டி, பாலக்காடு ரோடு, வடுகபாளையம், உசேன் காலனி, மகாத்மா காந்தி வீதி, குமரன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 28 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 76 பேருக்கும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 25 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 59 பேருக்கும், வால்பாறை தாலுகாவில் 8 பேருக்கும் சேர்த்து மொத்தம் 250 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 

இதையடுத்து கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியை தனிமைப்படுத்தி  சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரபடி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 170 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்