அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவு
2 நாட்கள் பஸ் இயக்க அரசு உத்தரவையொட்டி காரைக்குடியில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
சிவகங்கை,
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நாளை(திங்கட்கிழமை) முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து 2 நாட்களுக்கு மட்டும் தமிழகத்தில் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இந்த பஸ் போக்குவரத்து நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இயக்க உத்தரவிடப்பட்டது.
காரைக்குடியில் இருந்து நேற்று மதுரை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்ற அரசு பஸ்களில் 5 முதல் 10 வரையிலான பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்த நிலையில் பயணம் செய்தனர். இதேபோல் திருப்பத்தூர் பகுதியில் இருந்து சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு மட்டும் குறைந்தளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களிலும் குறைந்தளவே பயணிகள் பயணம் செய்தனர்.
நேற்று பெரும்பாலான இடங்களில் அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்ட நிலையில் தனியார் பஸ்கள் முற்றிலும் இயக்கவில்லை. 2 நாட்கள் மட்டும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாலும், காலை 6மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் அனுமதிக்கப்பட்டதாலும் குறைந்தளவு எண்ணிக்கையில் மட்டும் தான் பயணிகள் பஸ்சில் பயணம் செய்வதால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று கூறி தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்க முன்வரவில்லை.
2 நாட்கள் பஸ் இயக்க அரசு உத்தரவையொட்டி காரைக்குடியில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
பஸ் இயக்க உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் போடப்பட்ட தடுப்பு வேலிகள் நேற்று அகற்றப்பட்டு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதியில் குறைந்தளவு எண்ணிக்கையில் அரசு பஸ்கள் நேற்று மாலை இயக்கப்பட்டன. காரைக்குடி பகுதியில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று மாலை மதுரை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு மட்டும் 4 முதல் 6 எண்ணிக்கை கொண்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப்புறங்களுக்கு ஒரு சில டவுன் பஸ்கள் மட்டும் நேற்று இயக்கப்பட்டது.. இரவு 9 மணி வரை மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்து பெரும்பாலான பயணிகள் தங்களது பயணத்தை தவிர்த்தனர்.
குறைந்த பயணிகள்