கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-05-22 18:43 GMT
வையம்பட்டி,
வையம்பட்டியை அடுத்த கருங்குளத்தைச் சேர்ந்தவர் துர்கா தேவி (வயது 19). தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் துர்காேதவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்