கரூர் மாவட்டத்தில் புதிதாக 315 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் புதிதாக 315 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பரிதாமாக இறந்துள்ளனர்.
கரூர்
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 336 பேர் நேற்று குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். நேற்றைய நிலவரப்படி 2,082 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.