பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று உடல் வெப்பபரிசோதனை

பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று உடல் வெப்பபரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-05-22 18:25 GMT
தோகைமலை
கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தோகைமலை சுகாதார நிலையம் சார்பில் முன்களப்பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள வீடுகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்கள் மத்தியில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு உடல் வெப்பபரிசோதனை செய்து,  சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? என கண்டறிந்தனர். அப்படி ஏதேனும் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டால் தோகைமலை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்