திருச்செந்தூர் அருகே வீடடின் கதவை உடைத்து 8 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

திருச்செந்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-05-22 18:11 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே சோலைகுடியிருப்பு சுந்தரபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 63). இவர் கடந்த 19-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாசரேத் அருகே கடையனோடையில் ஒரு துக்க வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த தங்கச்சங்கிலி, நெக்லஸ், மோதிரம், ஜிமிக்கி என மொத்தம் 8¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து வடிவேல் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்