குளித்தலையில் போலீசார் தீவிர வாகன சோதனை
குளித்தலையில் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து 130 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
குளித்தலை
தீவிர சோதனை
தமிழகத்தில் கொரோனா நோய்பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவந்தது. இதையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் மாவட்ட எல்லை பகுதியான குளித்தலை- திருச்சி மாவட்டம் முசிறி செல்லும் சாலை மற்றும் மருதூர் - திருச்சி மாவட்டம் பெட்வாய்த்தலை செல்லும் சாலைகளில் குளித்தலை போலீசார் சார்பில் கடந்த சில நாட்களாக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டுவந்தது.
130 வாகனங்கள் பறிமுதல்
இதேபோல குளித்தலை நகரின் முக்கிய இடங்களிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அதில் உரிய காரணங்களுக்காக வாகனங்களில் செல்வோர்கள் முறைப்படி இ- பதிவு செய்யப்பட்ட ஆவனங்களை வைத்துள்ளார்களா? என்று சோதனை செய்துவந்தனர். அதேபோல உரிய காரணங்கள் இன்றி தேவையற்ற முறையில் வாகனங்களில் வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துவந்தனர்.
கடந்த 6 நாட்களில் மட்டும் அரசு விதிமுறைகளைமீறி மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 130 க்கும் மேற்பட்டோரின் இரு சக்கர வகனங்களை குளித்தலை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அபராதம்
அதேபோல குளித்தலை வருவாய்த்துறை, நகராட்சி, போலீசார் சார்பில் முககவசம் அணியாமல் இருந்த நூற்றுக்கணக்கான பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறி கடைகள் திறந்துவைத்த சிலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் தீவிர வாகன சோதனை காரணமாக குளித்தலை பகுதியில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவோர் எண்ணிக்கை கனசமான அளவு குறைந்துள்ளது.