கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம். அமைச்சர் காந்தி பங்கேற்பு
கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம். அமைச்சர் காந்தி பங்கேற்பு
வாலாஜா
வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள்குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்கு ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) ஜெயராமன், உதவி இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சினிவாசன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி ஊராட்சி செயலாளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா நன்றி கூறினார்.