நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 598 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,598 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 598 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்லது.

Update: 2021-05-22 17:44 GMT
நாமக்கல்:
598 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரமாக அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 598 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,598 ஆக அதிகரித்து உள்ளது.
20,988 பேர் குணமாகினர்
மாவட்டத்தில் நேற்று 411 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 20 ஆயிரத்து 988 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 185 பேர் இறந்து விட்ட நிலையில், 3,425 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும், தேவையின்றி வாகனங்களில் சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்