கொரோனாவுக்கு மேலும் 3 பேர் சாவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வுக்கு மேலும் 3 பேர் இறந்தனர். புதிதாக 406 பேருக்கு தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை, மே.23-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வுக்கு மேலும் 3 பேர் இறந்தனர். புதிதாக 406 பேருக்கு தொற்று உறுதியானது.
கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. தமிழக அரசால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் மாவட்டத்தில் புதிதாக 406 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 554 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 226 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 214 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 3 ஆயிரத்து 154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 பேர் சாவு
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களில் கொரோனாவுக்கு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த 51 வயது பெண், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 54 வயது ஆண், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 60 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது.