பசித்தவர்கள் எடுத்துக்கொள்ள உணவு வைக்கும் நிகழ்ச்சி

பசித்தவர்கள் எடுத்துக்கொள்ள உணவு வைக்கும் நிகழ்ச்சி

Update: 2021-05-22 16:36 GMT
இடிகரை

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்கள் உள்பட சிலர் உணவு இன்றி பசியால் தவிப்பதை போக்கும் வகையில் போலீஸ் நிலையம் சார்பில் பசித்தவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்ற திட்டத்தை தொடங்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். 

அதன்படி பெரியநாயக்கன்பாளை யம் போலீஸ் நிலையம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் நரசிம்ம நாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பசித்தவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற திட்டத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

இங்கு தினமும் மதிய வேளையில் உணவு, பழம், பிஸ்கெட், ரொட்டி, தண்ணீர் பாட்டில் ஆகியவையும், மாலையில் பிஸ்கெட், ரொட்டி  ஆகியவை வைக்கப்படும். உணவு இன்றி தவிப்பவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம்.

 அவர்கள், அங்குள்ள முக கவசம் மற்றும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு உணவுகளை எடுத்து செல்ல வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்