கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது
கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, வினோத்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வடக்கநந்தல் பகுதியில் சாராயம் விற்ற கட்டையன் மகன் பழனி(வயது 26), எடுத்தவாய்நத்தம் பெரியசாமி(50), கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் ரஜினி(35), மாதவச்சேரி கிராமத்தில் சாராயம் விற்ற சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த முருகன்(55) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 95 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.