திருப்பூர் மாவட்டத்தில் ஆர்.டி.ஓ.தாசில்தார் அலுவலகங்களில் வருகிற 1 ந்தேதி முதல் வெள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் ஆர்டிஓ தாசில்தார் அலுவலகங்களில் வருகிற 1ந்தேதி முதல் வெள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.;

Update:2021-05-22 21:15 IST
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்களில் வருகிற 1-ந்தேதி முதல் வெள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை செயல்படவேண்டும். வெள்ளம் சம்பந்தமாக பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொலைபேசி வாகனங்கள் மற்றும் வயர்லெஸ் கருவிகள் அனைத்தும் இயங்கக்கூடிய நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெள்ள கட்டுப்பாட்டு அறை
அடுத்த மாதம் (ஜூன்) மாதம் 1-ந்தேதி முதல் வெள்ள கட்டுப்பாட்டு அறை ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் 24 மணி நேரமும் உரிய பணியாளர்களுடன் இயங்கவேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் 1077 என்ற இலவச எண்ணிற்கு வெள்ளம் பற்றி பெறப்படும் தகவல்களை் தெரிவிக்க வேண்டும். மழையளவு பற்றிய விவரங்களை தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணிக்குள் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வெள்ள சேதம் பற்றிய அறிக்கைகளை தாசில்தார், ஆர்.டி.ஓ.க்களுக்கு தெரிவிக்க வேண்டும். நீர்வழி புறம்போக்கில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆ.டி.ஓ.க்கள், தாசில்தார்கள் தங்களது பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மையங்களான அனைத்து திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவு கூடங்களை தேர்வு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்காக தனி குழு அமைக்க வேண்டும்.
பாதுகாப்பு மையங்கள்
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதால் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு மையங்களை தேர்வு செய்து வைத்திருக்கவேண்டும்.  பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் தனிமைப்படுத்துதல் முகாம் ஏதும் இருந்தால் அந்தப் பகுதிகளை மாற்றி அமைக்க வேண்டும். பொது வினியோக பொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர் பாசன கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு ஆக்கிரமிப்பு இல்லாமல் பராமரிக்க வேண்டும். மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் பட்டியலை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். நோய் பரவலை தடுக்க குளோரின் கலந்த குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, தாராபுரம் சப்- கலெக்டர் பவன்குமார், ஆர்.டி.ஓ.க்கள் ஜெகநாதன், கீதா, நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், அனைத்து தாசில்தார்கள், பொதுப்பணித்துறை, கல்வித்துறை, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, வனத்துறை, உணவு பொருள் வழங்கல் துறை, அரசு போக்குவரத்து கழகம், காவல் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரிய துறை, கூட்டுறவுத் துறை, பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்