திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாரபட்சமாக தடுப்பூசி செலுத்துவதாக குற்றம் சாட்டினர்.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாரபட்சமாக தடுப்பூசி செலுத்துவதாக குற்றம் சாட்டினர்.
திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாரபட்சமாக தடுப்பூசி செலுத்துவதாக குற்றம் சாட்டினர்.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. முதலில் தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்தும் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதன் பின்னர் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
வாக்குவாதம்
அந்த வகையில் திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் டி.எஸ்.கே. ஆரம்ப சுகாதார நிலையம் என குறிப்பிட்ட சில இடங்களில் தான் தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. இதிலும் பொதுமக்கள் கூட்டம் தடுப்பூசி போட அலைமோதி வருகிறது. அதன்படி நேற்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
அப்போது அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த வேறு சிலரை உள்ளே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அங்கிருந்து மருத்துவ ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பாரபட்சமாக தடுப்பூசி செலுத்துவதாக குற்றம்சாட்டினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திவிட்டு சென்றனர்.