திருப்பூர் காலேஜ் ரோட்டில்கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
திருப்பூர் காலேஜ் ரோட்டில்கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநகர் பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதுபோல் டெங்கு காய்ச்சல் பாதிப்பை குறைக்கும் வகையிலும், கொசுத்தொல்லையை கட்டுப்படுத்தும் வகையிலும் மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.
திருப்பூரில் காலேஜ் ரோடு, குளத்துப்பாளையம், கொங்கு மெயின்ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வாகனங்கள் மூலம் கொசு மருந்து தெளித்து வருகிறார்கள். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையும் ஒரு புறம் மாநகராட்சி பணியாளர்கள் விறு, விறுப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.