கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவால் சேவூரில் தோட்டங்களில் அறுவடை செய்ய முடியாமல் செடியிலேயே பூக்களை காய விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பூ பயிரிடுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவால் சேவூரில் தோட்டங்களில் அறுவடை செய்ய முடியாமல் செடியிலேயே பூக்களை காய விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பூ பயிரிடுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-05-22 14:32 GMT
சேவூர் 
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவால் சேவூரில் தோட்டங்களில் அறுவடை செய்ய முடியாமல் செடியிலேயே பூக்களை காய விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பூ பயிரிடுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பூக்கள்
சேவூர் சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி, கோழிக்கொண்டை ஆகிய பூ வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. இப்பூக்கள் தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை செடிகளில் பறிக்கப்படுகிறது. 
இதையடுத்து பகல் 1 மணிக்கு சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதிக்கு அனைத்து விவசாயிகளும் பறித்த பூக்களை (மூட்டைகளாக) கொண்டு வருகின்றனர். அங்கிருந்து பஸ்கள் மற்றும் சரக்கு ஆட்டோகளில் திருப்பூர் தினசரி பூ மார்கெட்டுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி பறித்த பூக்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு 
இது குறித்து சேவூர் பாளிக்காடு பகுதியை சேர்ந்த பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயி கூறியதாவது:- 
மல்லிகைப்பூ, முல்லைபூக்கள் பயிரிட்டப்பட்டு 2  ஆண்டுகள் கழித்து 3-ம் ஆண்டு தொடக்கத்தில் தான் செடிகளில் பூ பிடிக்கும். இப்பூவானது தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பறிக்கப்படும். பிறகு பகல் 1 மணிக்கு மேல் அனைத்து விவசாயிகளும் சேவூரிலிருந்து பஸ் மூலமாக திருப்பூரில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு அனுப்பி வருகிறோம். 
இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சந்தைகள், மார்க்கெட்டுகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தான் செயல்படுவதால் எங்களால் எங்களது விளைபொருளான பூ வகைகளை அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம். மேலும் 2  ஆண்டுகளாக பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்டு வளர்க்கப்பட்டு இன்று பூக்கள் பறிப்பதற்கு ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே காயவிடும் நிலை ஏற்படுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்