மராட்டியத்தில் புதிதாக 29 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா 555 பேர் பலி
மராட்டியத்தில் புதிதாக 29 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 555 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று 29 ஆயிரத்து 644 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்து 27 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 555 பேர் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறப்பு எண்ணிக்கை 86 ஆயிரத்து 618 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல நோயில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. நேற்று 44 ஆயிரத்து 493 நோயாளிகள் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினர். இதுவரை 50 லட்சத்து 70 ஆயிரத்து 801 நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது 3 லட்சத்து 67 ஆயிரத்து 121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மராட்டியத்தில் நோயில் இருந்து விடுபட்டவர்கள் சதவீதம் 91.74 சதவீதமாக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.57 ஆக உயர்ந்துள்ளது.