மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது

மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-05-22 10:15 GMT
கூடலூர்:
கூடலூர் பகுதியில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முன்பு மதுபாட்டில்களை மொத்தமாக விலைக்கு வாங்கி குடோன்களிலும், தோட்டங்களிலும் திருட்டுத்தனமாக பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர். இதுகுறித்து கூடலூர் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையில் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் மெயின் பஜார் வீதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த முனியப்பன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 203 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்