திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 32 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரையில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 32 பேர் பலியானார்கள்.
கொரோனா பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலியாகி வருவோரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,667 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 89 ஆயிரத்து 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
32 பேர் பலி
அவர்களில் 76 ஆயிரத்து 502 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 12 ஆயிரத்து 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,133 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் இதுவரையில் இல்லாத அளவிற்கு உச்ச கட்டமாக 32 பேர் இறந்து
உள்ளனர்.