நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 405 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 405 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2021-05-21 22:18 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 405 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
170 பெண்கள்
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 23,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,588 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ்காரர், அரசு பஸ் டிரைவர் மற்றும் 170 பெண்கள் உள்பட 405 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,993 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 388 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.
3,236 பேருக்கு சிகிச்சை
 இதுவரை கொரோனாவுக்கு 180 பேர் பலியாகி உள்ள நிலையில், மாவட்டத்தில் இதுவரை 20,577 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 3,236 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
======

மேலும் செய்திகள்