திருவேங்கடத்தில் கடை வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை

திருவேங்கடத்தில் கடை வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2021-05-21 20:40 GMT
திருவேங்கடம், மே:
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் கடை வீதிகளில் காலை 4 மணி முதல் 10 மணி வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், கொேரானா பரவலை தடுக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதித்து பொதுமக்கள் நடந்து சென்று கடைகளில் பொருட்களை வாங்கிச்செல்லும் விதமாக நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நேரத்தில் அவசர தேவைக்காக செல்லும் வாகனங்கள், அரசு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்றவை மட்டும் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
மேலும் கடை வீதிக்கு பொருட்கள் வாங்க வரும்போது மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதை மீறுபவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் திருவேங்கடம் தாசில்தார் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்