திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா?
திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா என்று தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளில் அவருடன் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் திருச்சி மாநகராட்சி ஆணையராக இருக்கும் சிவசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்ததாக இணையதள ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. ஆனால் அதனை மாநகராட்சி ஆணையர் மறுத்துள்ளார். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவில் தனக்கு நெகட்டிவ் என வந்து இருப்பதாகவும், அதற்கான சான்றிதழையும் இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.