திருச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு இளம்பெண் உள்பட 15 பேர் பலி; புதிதாக 1,331 பேருக்கு தொற்று
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 26 வயது பெண் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,331 பேருக்கு தொற்று உறுதியானது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 26 வயது பெண் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,331 பேருக்கு தொற்று உறுதியானது.
புதிதாக 1,331 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,331 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 43,993 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 10,861 பேர் உள்ளனர்.
இளம் பெண் உள்பட 15 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார், அரசு ஆஸ்பத்திரி மற்றும் பொன்மலை ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 26 வயது இளம் பெண் மற்றும் 54, 60, 62 வயதுடைய 4 பெண்கள் மற்றும் 39, 44, 55, 60, 61, 62, 64, 67,68, 70, 85 வயதுடைய 11 ஆண்கள் என மொத்தம் 15 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர்.
இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 409 ஆக உயர்ந்தது. அதே நேரம் 933 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 32,723 ஆகும்.
படுக்கைகள் காலி விவரம்
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் 18 படுக்கைகள், சாதாரண படுக்கைகள் 262 மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் 42 என மொத்தம் 324 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.