சூதாடிய 4 பேர் கைது
சிவகாசி அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் பட்டி தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மணிகண்டன் (வயது 41), ரமேஷ் (33), சந்திரன் (53), தங்கப்பாண்டியன் (34) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2150-யை பறிமுதல் செய்தனர்.