கொரோனா தடுப்பூசி முகாம்
ஆலங்குளம் அருகே கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள சாமிநாதபுரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் துரை வையாபுரி வைகோ தலைமையில் நடைபெற்றது. முகாமினை சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு முக கவசம், கப சுர குடிநீர் வழங்கப்பட்டது. சாத்தூர் தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என ரகுராமன் எம்.எல்.ஏ. கூறினார். இதில் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.