மீன் விற்பனை அங்காடியை நடத்த மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூரில் மீன் விற்பனை அங்காடியை நடத்த மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-05-21 19:56 GMT
பெரம்பலூர்:
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் 1-ன் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னாறு உபவடி நிலப்பகுதியில் நவீன மீன் விற்பனை அங்காடி பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் விற்பனை அங்காடியை எடுத்து நடத்துவதற்கு விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் அறை எண் 234-ல் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், பெரம்பலூர் எஸ்.கே.சி. காம்பளக்சில் மேல் தளத்தில் மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04329-228699 என்ற தொலைபேசி எண்ணிலோ, adfariyalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்