முககவசம் அணியாத-சமூக இடைவெளியை கடைபிடிக்காத 235 பேருக்கு அபராதம்

முககவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 235 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-21 19:55 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் சுகாதாரத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் முககவசம் அணியாத 200 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.40 ஆயிரமும், சமூக இடைவெளியை பின்பற்றாத 35 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.17 ஆயிரத்து 500-ம் அபராதமாக விதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 71 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்