சென்னை விமான நிலையத்தில் கனமழை எதிரொலி: திருச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

சென்னை விமான நிலையத்தில் கனமழை எதிரொலியாக 2 விமானங்கள் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டன.

Update: 2021-05-21 19:52 GMT

செம்பட்டு, மே.22-
சென்னை விமான நிலையத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து ஜோத்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு மாலை 4 மணிக்கு வந்து மீண்டும் திருச்சி விமான நிலையத்திலிருந்து 5.25 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

இதேபோன்று திருச்சியிலிருந்து சென்னைக்கு மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் சென்னையில் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் மாலை 4.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கே வந்தடைந்தது. பின்பு மீண்டும் மாலை 5.50 மணிக்கு சென்னையை நோக்கிப்புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்