வீணாகும் குடிநீர்
தளவாய்புரம் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே முகவூர் காமராஜர் சிலை அருகில் கடந்த சில நாட்களாக தாமிரபரணி குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. தற்போது கோடைக்காலம் என்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை செட்டியார்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.