ஜவுளி கடைக்கு “சீல்”

அருப்புக்கோட்டையில் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு “சீல்” வைத்தனர்.

Update: 2021-05-21 19:48 GMT
அருப்புக்கோட்டை, 
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 மணிக்கு மேல் மருந்து கடைகளை தவிர பிற கடைகளை இயங்க அனுமதி இல்லை. இந்நிலையில் அருப்புக்கோட்டை நகர்ப்பகுதியில் தாசில்தார் ரவிச்சந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது விதிகளை மீறி ஜவுளிக்கடை ஒன்று இயங்கி வந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு “சீல்” வைத்தனர்.

மேலும் செய்திகள்