பாம்பு கடித்து சிறுமி சாவு
தளவாய்புரம் அருகே பாம்பு கடித்து சிறுமி பரிதாபமாக இறந்தது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலி முருகன் ஆரம்ப பாடசாலை தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). இவரது இரண்டாவது மகள் முத்து (15) திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது பாம்பு ஒன்று கடித்தது. இதுபற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினாள். உடனே ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.