பரிசோதனைக்காக செல்ல முடியாமல் கர்ப்பிணிகள் தவிப்பு

போக்குவரத்து வசதி இல்லாமல் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் நிைல உள்ளதால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வர சிறப்பு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-21 19:13 GMT
உசிலம்பட்டி,மே.
போக்குவரத்து வசதி இல்லாமல் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் நிைல உள்ளதால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வர சிறப்பு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா பாதிப்பின் 2-ம் அலை மிக கடுமையாக உள்ளால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கையொட்டி பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள சூழலில் மாதாந்திர மற்றும் வாராந்திர பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகை தரும் கர்ப்பிணி தாய்மார்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஒவ்வொரு மாதம் மற்றும் பிரதி வாரம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கர்ப்பிணிகள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று எடை அளவு, ரத்த அழுத்தம், குழந்தையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.
கோரிக்கை
கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலும் 5 மற்றும் 7-வது மாதங்கள் கடந்தவுடன் கர்ப்பிணி பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு வந்து அங்கிருந்து பரிசோதனைகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால் இந்த ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து வசதியின்றி பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.
எனவே அவர்களது சிரமங்களை கருத்தில் கொண்டு பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பஸ் வசதி அல்லது சிறப்பு ஆம்புலன்ஸ் வசதிகளை செய்து கொடுக்க அரசு முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்