ஓசூரில், கருப்பு பூஞ்சை பாதித்த ெதாழிலாளியின் இடது கண் ஆபரேஷன் மூலம் அகற்றம்
ெதாழிலாளியின் இடது கண் ஆபரேஷன் மூலம் அகற்றம்
ஓசூர், மே.22-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 46). கூலி தொழிலாளியான இவர் கண்பார்வை குறைபாடு காரணமாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், நாளுக்கு நாள் கண்பார்வை குறைந்து வலி அதிகரித்ததால் ஓசூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 4 மணி நேர சிகிச்சைக்கு பின் அவரது இடது கண் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:- 10 லட்சம் பேரில் ஒருவருக்கு தாக்கக்கூடிய கருப்பு பூஞ்சை, பசவராஜின் மூக்கு வழியாக கண் பகுதிக்கு பரவி கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. பல சிகிச்சைக்கு பிறகு எங்கள் மருத்துவமனைக்கு அவர் வந்தார். அவரை பரிசோதித்தபோது இடது கண் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்தோம். இதையடுத்து மருத்துவக்குழுவினரின் 4 மணிநேர சிகிச்சைக்கு பிறகு அவரின் இடது கண் முழுமையாக அகற்றப்பட்டதுடன் கருப்பு பூஞ்சையும் அகற்றப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்குறைவு, சர்க்கரை நோய் உள்ளிட்டவர்களுக்கு கரும் பூஞ்சை அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.