மல்லசமுத்திரம் பகுதியில் மது பதுக்கி விற்ற 5 பேர் கைது

மல்லசமுத்திரம் பகுதியில் மது பதுக்கி விற்ற 5 பேர் கைது

Update: 2021-05-21 18:30 GMT
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது மங்கலம், ஆத்துமேடு, ராமாபுரம் ஆகிய பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற மங்கலத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 40), குமார் (45), ஆத்துமேட்டை சேர்ந்த மணிகண்டன் (32), லட்சுமணன் (59) மற்றும் ராமாபுரத்தை சேர்ந்த முருகன் (38) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 133 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
========

மேலும் செய்திகள்