மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்

மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-05-21 18:28 GMT
அன்னவாசல், மே.22-
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் குளத்து பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த  வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்