இளையான்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நகர் முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சுல்தான் அலாவுதீன் தெரு மற்றும் வடக்குத்தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயராஜன் தொடங்கி வைத்தார். பொதுமக்களும் ஆர்வத்துடன் கபசுர குடிநீரை வாங்கி குடித்தனர்.