துணிகளை உலர வைத்த பெண் மின்சாரம் தாக்கி சாவு

துணிகளை உலர வைத்த பெண் மின்சாரம் தாக்கி சாவு

Update: 2021-05-21 17:36 GMT
கலசபாக்கம்

கலசபாக்கத்தை அடுத்த பூண்டி கிராமம் கருணீகர் தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி சங்கரி (வயது 52). இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள மின் கம்பத்தின் ஸ்டே கம்பியிலிருந்து துணி காயவைப்பதற்கு கொடி கம்பி கட்டப்பட்டுள்ளது.

நேற்று சங்கரி துவைத்த ஈரத்துணிகளை கம்பியின் மீது போட்டுள்ளார் அப்போது திடீரென எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சங்கரி விழுந்து இறந்தார். அப்போது வெளிேய சென்று விட்டு வீடு திரும்பிய கணபதி பின்பக்க கதவு திறந்திருப்பதை பார்த்தார். மனைவி சங்கரி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கலசபாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்