கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 20 டாக்டர்கள், 100 செவிலியர்கள் நியமனம்

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 20 டாக்டர்கள், 100 செவிலியர்கள் நியமனம்

Update: 2021-05-21 16:36 GMT
வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பாதிப்பு தீவிரமான நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் 832 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 1,235 படுக்கைகள் என்று மொத்தம் 2,067 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவையை கருத்தில் கொண்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கைகள், 39 தீவிர சிகிச்சைக்கான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் என்று 89 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்கவும், தரமான சிகிச்சையை உறுதி செய்யவும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது முதற் கட்டமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 20 டாக்டர்களும், 100 செவிலியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். கொேரானா பரிசோதனைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு கூடுதலாக 20 லேப் டெக்னீசியன்கள் மாவட்டம் முழுவதும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்