மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது

Update: 2021-05-21 16:18 GMT
மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் இளையாங்கண்ணி கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த 2 பேரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் அவர்கள் வைத்திருந்த பக்கெட்டுக்குள் சாராய பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் குமார்(வயது 36), கண்ணன் மகன் சக்தி(35) என்பதும், சாராய பாக்கெட்டுகளை பக்கெட்டுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குமார், சக்தி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து  50 லிட்டர் சாராயம் மற்றும் மொபட் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்