தஞ்சை மாநகரில் நகை அடகு கடை, ஜவுளிக்கடை உள்பட 5 கடைகளுக்கு சீல் வைப்பு

தஞ்சையில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட இரண்டு நகை அடகு கடைகள், ஜவுளி கடை, டீ கடை உள்பட 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2021-05-21 16:07 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கில் மருந்து கடைகள், பால் பூத் முழுவதுமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள் இறைச்சி கடைகள் போன்றவை காலை 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது..

இதர வணிகக் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. அதையும் மீறி கடைகள் செயல்படுகிறதா? என அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் படி தஞ்சை மாநகரில் மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் கண்ணதாசன் ஆறுமுகம் ஆகியோரும் வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் ஜானகிராமன், அதிகாரி பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தஞ்சை மாநகரில் ரோந்து சுற்றி வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சீல் வைப்பு

இந்த நிலையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 2 நகை அடகு கடைகள் மற்றும் குழந்தைகள் துணிக் கடை, கேபிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை தேனீர் கடை என மொத்தம் ஐந்து கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்