நீலகிரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

நீலகிரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்.

Update: 2021-05-21 16:05 GMT
பிள்ளையார்பட்டி,

தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி தஞ்சை நீலகிரி ஊராட்சியில் கொரோனா பரவலை தடுக்கும் பணிக்கு ஊராட்சியின் சார்பில் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கு நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து தஞ்சை ஒன்றிய உதவி பொறியாளர் ஆனந்த், துணைத்தலைவர் சிங். சரவணன், ஊராட்சி செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 குடும்பங்களுக்கு ஒரு நபர் வீதம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தன்னார்வலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு சேவை மனப்பான்மையுடன் உதவும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டு பரிசோதனை செய்வது. ஆரம்ப அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவது. தனிமைப்படுத்தி இருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அவர்களை கொரோனா தடுப்பூசி போட வைப்பது. தமிழக அரசின் கொேரானா விதிமுறைகள் கடைப்பிடிப்பதை பொதுமக்களிடம் உறுதி செய்வது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்களை கண்காணிப்பு செய்து சமூக இடைவெளியை பின்பற்ற செய்வது. அனைவரையும் கட்டாயம் முக கவசம் அணிய செய்வது என்பன உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்