பழனி அருகே மலைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
பழனி அருகே ஊரடங்கால் தவித்த மலைவாழ் மக்களுக்கு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.
பழனி:
பழனி வரதமாநதி அணை அருகே குட்டிக்கரடு கிராமம் உள்ளது. மலையடிவாரத்தில் உள்ள இந்த கிராமத்தில் பளியர் இனத்தை சேர்ந்த 25 குடும்பத்தினர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் கோரைப்புற்கள், கிழங்கு, மலைத்தேன் சேகரிப்பதாகும்.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு எதிரொலியாக, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மலைக்கிராம மக்கள் தவித்தனர். இதுகுறித்து அறிந்த ஆயக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தனது சொந்த செலவில் அரிசி, பருப்பு மற்றும் காய்கறி பொருட்களை வழங்க முடிவு செய்தார்.
அதன்படி நேற்று அவர் குட்டிக்கரடு கிராமத்துக்கு நேரில் சென்று, பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா முன்னிலையில் அத்தியாவசிய பொருட்களை, மலைவாழ் மக்களுக்கு வழங்கினார். இதையடுத்து அவரை போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் போலீசார் பாராட்டினர்.