20 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்

பாப்பம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-21 15:33 GMT
பழனி: 

பழனி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பழனி அரசு மருத்துவமனை, பழனியாண்டவர் கல்லூரியில் உள்ள மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதற்கிடையே கிராம பகுதிகளில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், அவர்கள் பழனிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதை தடுக்க நேற்று முதல் பாப்பம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கிராமப்புற மக்கள் பலர் தற்போது கொரோனாவல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

எனவே பாப்பம்பட்டியில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாதிப்பின் அளவை பொறுத்து அவர்கள் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுவர். 

அதன்படி 2 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர். பாதிப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என்றனர்.

மேலும் செய்திகள்