ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகளில் உலா வரும் கால்நடைகள்

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகளில் உலா வரும் கால்நடைகள்.;

Update: 2021-05-21 15:16 GMT
ஊட்டி,

முழு ஊரடங்கு உத்தரவால் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்து செயல்பட்டு வருகிறது. ஊட்டி நகரில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் வாகனங்களில் வந்து செல்வதால் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.

10 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்படுகிறது. இதனால் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய நிலையில் உள்ளது. வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிய சாலைகளில் குதிரைகள், மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. நடுரோட்டில் நிற்பதோடு படுத்து ஓய்வு எடுத்தும் வருகின்றன.

மேலும் செய்திகள்