கணியூரில் சாலையோரம் இயங்கி வந்த காய்கறி கடைகள் பஸ் நிலையத்திற்கு மாற்றம்

கணியூரில் சாலையோரம் இயங்கி வந்த காய்கறி கடைகள் பஸ் நிலையத்திற்கு மாற்றம்

Update: 2021-05-21 15:04 GMT
மடத்துக்குளம்
கணியூரில் சாலை யோரம்  10-க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி கடைகள்  கணியூர் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்பின்னரும்  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பலரும் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், கூட்டம் கூட்டமாக இருந்து வருகின்றனர். இதனால்  நோய்தொற்று மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 
எனவே வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கும்படி வெள்ளை கோடுகள் வரைய வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்