கீழையூர், கீழ்வேளூர் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்
கீழையூர், கீழ்வேளூர் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;
வேளாங்கண்ணி,
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் கீழையூரில் நடைபெற்றது. முகாமிற்கு டாக்டர் சுபா தலைமை தாங்கினார். முகாமில் 70-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த ஜோதிபால்ராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
கீழ்வேளூர், சிக்கல்
இதேபோல் கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனி, 64 மணலூர், செருநல்லூர் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு காக்கழனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 22 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் தேவூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரோகிணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவக்குமார், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சிக்கல் ஊராட்சியில் உள்ள அம்மா மினி கிளினிக்கில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் 44 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வடுகச்சேரி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அபிதா தலைமையில் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் விமலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திட்டச்சேரி
திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.இதில் 35 பேருக்கு கொரோனா தடுப்பூசியும், 42 பேருக்கு பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் நோய் தொற்று பாதிப்பு குறித்தும் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆயக்காரன்புலம்
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமில் மருத்துவர்கள் சுந்தர்ராஜன், பரத் ஆகியோர் கொண்ட குழுவினர் கொரோனா தடுப்பூசி போட்டனர்.இந்த முகாமில் ஆயக்காரன்புலம், மருதூர், பஞ்சநதிக்குளம், தகட்டூர், பன்னாள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், ராஜு, ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.