தூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2021-05-21 11:32 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா தலைமையில் எடுக்கப்பட்டது. அகிம்சை, சகிப்புத்தன்மை மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வாகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம் என்றும். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்ப்போம் என்றும், மேலும் மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற் பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடுவோம் என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கிறிஸ்டோபர் ஜெயராஜ், அலுவலக மேலாளர் (பொது) இளங்கோ, அலுவலக மேலாளர் (குற்றவியல்) ஜாண்சன், தேர்தல் தாசில்தார் ரகு உள்பட பல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்