வீரபாண்டியில் ஊரடங்கை மீறிய 4 கடைகளுக்கு ‘சீல்’
வீரபாண்டியில் ஊரடங்கை மீறிய 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
உப்புக்கோட்டை:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வீரபாண்டியில் திறக்கப்பட்டு இருந்த சீட்கவர் கடை, மோட்டார் சைக்கிள் ஒர்க் ஷாப் கடை உள்பட 4 கடைகளை பேரூராட்சி செயல்அலுவலர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் மதுகண்ணன் ஆகியோர் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
இதே போன்று கோட்டூரில் ஊரடங்கை மீறி திறந்த 2 கடைகளை கோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா தலைமையில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் மற்றும் போலீசார் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் பொதுமக்களை சாப்பிட அனுமதித்த 2 ஓட்டல்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.